உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  பகுதி நேர ரேஷன் கடை அமைக்க சீட்டணஞ்சேரி மக்கள் வலியுறுத்தல்

 பகுதி நேர ரேஷன் கடை அமைக்க சீட்டணஞ்சேரி மக்கள் வலியுறுத்தல்

சீட்டணஞ்சேரி: சீட்டணஞ்சேரி காலனியில் பகுதி நேர ரேஷன் கடை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். உத்திரமேரூர் ஒன்றியம், குருமஞ்சேரி ஊராட்சிக்கு உட்பட்ட சீட்டணஞ்சேரி கிராமத்தில், ஆற்றங்கரை பகுதியில் 110 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதி குடும்ப அட்டைதாரர்கள், பொது வினியோக திட்டத்தின் கீழ், நியாயவிலை கடையில் வழங்கப்படும் உணவுப் பொருட்களை பெற ஒன்றரை கி.மீ., துாரத்தில் உள்ள சீட்டணஞ்சேரியில் உள்ள ரேஷன் கடைக்கு செல்லும் நிலை பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. இதனால், அரிசி உள்ளிட்ட ரேஷன் பொருட் களை இருசக்கர வாகனங்கள் மூலம் மட்டுமே எடுத்து வர வேண்டிய நிலை இருந்து வருகிறது. வாகன வசதி இல்லாத முதியோர் மற்றும் பெண்கள் ரேஷன் கடைக்கு சென்று உணவுப் பொருட்கள் வாங்கி வர இயலாமல் மிகவும் அவதிப்படுகின்றனர். மேலும், மழை மற்றும் வெயில் நேரங்களில் ரேஷன் கடைக்கு சென்றுவர அப் பகுதி மக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, சீட்டணஞ்சேரி காலனியில் பகுதி நேர ரேஷன் கடை ஏற்படுத்தி உணவுப் பொருட்கள் வினியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை