உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  கல்லுாரியில் கருத்தரங்கம்

 கல்லுாரியில் கருத்தரங்கம்

கீழம்பி: காஞ்சிபுரம் அடுத்த கீழம்பியில் உள்ள காஞ்சி கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், முதுகலை தமிழாய்வு துறை மற்றும் ஆசிய பண்பாட்டு ஆராய்ச்சி மையம் சார்பில் நேற்றுமுன்தினம், 'தமிழ் கல்வெட்டுகளும் தமிழர் வரலாறும்' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. கல்லுாரி நிறுவனர் பா.போஸ் தலைமை வகித்தார். கல்லுாரி முதல்வர் வெங்கடேசன் துவக்க உரையாற்றி, சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். ஆசிய பண் பாட்டு ஆராய்ச்சி மைய நிறுவனர் முனைவர் அண்ணாதுரை, கருத்தரங்கின் நோக்கம் குறித்து பேசினார். சென்னை உதவி கல்வெட்டு ஆய்வாளர் மற்றும் துணை கண்காணிப்பாளர் நாகராஜன், 'தமிழ் கல்வெட்டுகளும் தமிழர் வரலாறும்' என்ற தலைப்பில் உரையாற்றினார். கருத்தரங்கில், காஞ்சி கிருஷ்ணா கல்வி அறக்கட்டளை நிர்வாகிகள், நிர்வாக இயக்குநர்கள், கல்லுாரி துணை முதல்வர் மற்றும் உதவி பேராசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ