உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்

சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில் இருந்து, தாமல்வார் தெரு, கோனேரிகுப்பம் வழியாக, ஏனாத்துார் கிராமத்திற்கு செல்லும் பிரதான சாலை உள்ளது.இந்த சாலை வழியாக, வேடல், ராஜகுளம், ஏனாத்துார் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்தவர்கள் காஞ்சிபுரம் மற்றும் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைக்கு செல்கின்றனர்.இதில், தாமல்வார் தெரு முடியும் இடம் மற்றும் மாதா கோவில் அருகே, மேன்ஹோலில் இருந்து, கழிவுநீர் சாலையில் வழிந்தோடுகிறது.இந்த சாலை வழியாக, நடந்து செல்வோர் மற்றும் வாகனங்களில் செல்வோர் மிகுந்த சிரமத்துடன் செல்ல வேண்டி உள்ளது.எனவே, பாதாள சாக்கடை அடைப்பை நீக்கி, சாலையில் வழிந்தோடும் கழிவுநீரை கட்டுப்படுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ