மேலும் செய்திகள்
வல்லக்கோட்டையில் கந்த சஷ்டி திருக்கல்யாண உத்சவம் விமரிசை
4 hour(s) ago
சிறுபினாயூர் ஏரி மதகை சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை
4 hour(s) ago
காஞ்சிபுரம் : அரசு திட்டத்தில் வீடு கட்ட முடியாதவர்களின் பெயர் பட்டியலை சிறப்பு கிராம சபை கூட்டத்தில் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட உள்ளது.காஞ்சிபுரம் மாவட்டத்தில், காஞ்சிபுரம், வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதுார், குன்றத்துார், உத்திரமேரூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில், 274 ஊராட்சிகள் உள்ளன.கான்கிரீட் வீடு அல்லாதவர்களுக்கு, பிரதமர் வீடு வழங்கும் திட்டம் மற்றும் ஆவாஸ் பிளஸ் திட்டம் ஆகிய திட்டங்களில், 12,189 நபர்களுக்கு வீடு கட்டும் ஆணை வழங்கப்பட்டு உள்ளன.காஞ்சிபுரம் மாவட்டத்தில், 12,189 வீடுகளுக்கு, 9,966 வீடு மட்டுமே கட்டுமான பணிகளை நிறைவு செய்துள்ளனர். இதில், 2,223 நபர்கள் வீடுகள் கட்டவில்லை என, ஊரக வளர்ச்சி துறை பணி மேற்பார்வையாளர்கள் மற்றும் உதவிப்பொறியாளர்களின் கள ஆய்வு மூலமாக வந்துள்ளன.வீடு கட்ட முடியாத நபர்களுக்கு, கடனுதவி செய்து கொடுப்பதாகவும், ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தியதால், 2,142 நபர்கள் வீடு கட்ட முன் வந்துள்ளனர். இதில், 81 நபர்கள் வீடு கட்டுவதற்குரிய சாத்தியக்கூறுகள் இல்லை என, தெரிய வந்துள்ளது.வீடு கட்ட முடியாத பயனாளிகளிடம் இருந்து, பணம் திரும்ப பெறுவதற்கு, ஊரக வளர்ச்சி துறை முடிவு செய்துள்ளது.முறையாக, அந்தந்த ஊராட்சி நிர்வாகத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளன. பயனாளிகளின் பட்டியலில் பெயர் நீக்கம், சேர்த்தல் ஆகியவை கிராம சபை கூட்டத்தில் தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும் என, ஊராட்சி தலைவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டு உள்ளன.இதுகுறித்து, ஊரக வளர்ச்சி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:வீடு கட்டும் பயனாளிகளின் பெயர் கிராம சபை கூட்டத்தில் ஒப்புதல் பெற்றிருப்பதால், கட்ட முடியாதவர்களின் பெயர்கள் மற்றும் அரசு அளித்த பணம் திரும்ப பெற தீர்மானமாக நிறைவேற்ற அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.இதை, குடியரசு தின சிறப்பு கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றிய பின், பணம் வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
4 hour(s) ago
4 hour(s) ago