உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பயன்பாடின்றி வீணாகும் கழிப்பறை சீரமைக்க தாயார்குளத்தினர் எதிர்பார்ப்பு

பயன்பாடின்றி வீணாகும் கழிப்பறை சீரமைக்க தாயார்குளத்தினர் எதிர்பார்ப்பு

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாநகராட்சி, தாயார்குளம் பகுதிவாசிகளுக்காக, 2014- - 15ல், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியல் இருந்து 5 லட்சம் ரூபாய் செலவில் பொது கழிப்பறை கட்டடம் கட்டப்பட்டு, 2017 ஜூலை 15ல் திறக்கப்பட்டது.அப்பகுதிவாசிகள் மற்றும் அருகில் மயானத்திற்கு வருவோர் கழிப்பறையை பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், மூன்று ஆண்டுகளுக்கு முன், கழிப்பறையின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், ஆழ்துளை குழாயில் பொருத்தப்பட்டுள்ள நீர்மூழ்கி மின்மோட்டார் பழுதானது.தண்ணீர் வசதி இல்லாததால், 5 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட கழிப்பறை பயன்பாடின்றி வீணாகி வருகிறது.எனவே, மின்மோட்டாரை சீரமைத்து, பொது கழிப்பறையை புதுப்பித்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை