உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / போன் பறித்த மூவர் கைது

போன் பறித்த மூவர் கைது

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் அருகே, துடைப்பம் வியாபாரியை தாக்கி, மொபைல் போன் பறித்த மூன்று பேரை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.பூந்தமல்லியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன், 47, துடைப்பம் வியாபாரி. இருசக்கர வாகனத்தில் சென்று, புறநகர் பகுதிகளில் உள்ள கடைகளில் துடைப்பம் விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார்.இந்த நிலையில், கடந்த டிச., 31ம் தேதி, ஸ்ரீபெரும்புதுார் அடுத்த, ஆரனேரி பகுதியல் உள்ள கடைக்கு துடைப்பம் விற்பனை செய்ய சென்றார்.அப்போது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த மூவர், ராஜேந்திரனை தாக்கி அவரிடமிருந்து மொபைல் போனை பறித்து அங்கிருந்து தப்பினர்.இது குறித்து ராஜேந்திரன், ஸ்ரீபெரும்புதுார் போலீசில் அளித்த புகாரின்படி, நெற்குன்றத்தைச் சேர்ந்த ஜோசப் ஆல்வாடி, 33, ஸ்டாலின், 21, சரத், 26 ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ