உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  களக்காட்டூரில் பயணியர் நிழற்குடை அமைப்பு

 களக்காட்டூரில் பயணியர் நிழற்குடை அமைப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த களக்காட்டூரில், உத்திரமேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர், ஒதுக்கீடு செய்த, 6.32 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக கட்டப் பட்டுள்ள பயணியர் நிழற்குடை வரும் 2026ம் ஆண்டு ஜன., மாதம் திறக்கப்பட உள்ளது. காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலை, களக்காட்டூர் கிராமத்தில் பேருந்து நிறுத்தம் உள்ளது. இங்கு விச்சந்தாங்கல், களக்காட்டூர் மற்றும் சுற்றியுள்ள கிராமத்தினர், உத்திரமேரூர் காஞ்சிபுரம் என, இரு வழித்தடத்தில் செல்லும் பேருந்துகளில் பயணித்து வருகின்றனர். இந்நிலையில், உத் திரமேரூர் செல்லும் சாலையோரம் பயணியர் நிழற் குடை அமைக்க வேண்டும், அதேபோல காஞ்சிபுரம் செல்லும் சாலையோரம் சிதிலமடைந்த நிலையில் உள்ள பழைய பயணியர் நிழற்குடையை அகற்றிவிட்டு புதிய நிழற்குடை அமைக்க வேண்டும் என, களக்காட்டூர், விச்சந்தாங்கல் உள்ளிட்ட பல்வேறு கிராமத்தினர் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், உத்திர மேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர், சட்டசபை தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, உத்திரமேரூர் செல்லும் சாலையோரம் மட்டும், புதிதாக நிழற்குடை அமைக்க 6.32 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்தார். இதையடுத்து பயணியர் நிழற்குடை புதி தாக அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து உத்திரமேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர் கூறியதாவது: களக்காட்டூரில் உத்திரமேரூர் செல்லும் சாலையோரம் புதிதாக கட்டப்பட்டுள்ள பயணியர் நிழற்குடை ஜனவரி மாதம் திறக்கப்படும். காஞ்சிபுரம் செல்லும் சாலையில், சிதிலமடைந்த நிலையில் உள்ள பயணியர் நிழற்குடை அகற்றப்பட்டு புதிய நிழற்குடை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்