உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / இரு வேறு ஜி.எஸ்.டி. எண் கறுப்பு பட்டியலில் கான்ட்ராக்டர்

இரு வேறு ஜி.எஸ்.டி. எண் கறுப்பு பட்டியலில் கான்ட்ராக்டர்

காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் மாநகராட்சியில் கட்டட பணி, சாலை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஒப்பந்ததாரர்கள் வாயிலாக மேற்கொள்ளப்படுகிறது. அவ்வாறு மேற்கொள்ளப்படும் பணிகளுக்கு, ஒப்பந்ததாரர்கள் ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி செலுத்த வேண்டும்.மாநகராட்சி ஒப்பந்ததாரர் பார்த்திபன், இரு வேறு எண்களில் ஜி.எஸ்.டி., எண் வைத்திருந்தது தெரியவந்தது. இவருடைய புதிய எண் நடைமுறையிலும், பழைய எண் நடைமுறையில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி., கணக்கு தாக்கல் செய்வதில், 7 லட்சம் ரூபாய்க்கு மேலாக நிலுவையில் இருப்பதாக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக, மாநகராட்சி நிர்வாகம் தரப்பில், ஒப்பந்ததாரர் பார்த்திபனுக்கு 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.அதில், '30 நாட்களுக்குள் ஜி.எஸ்.டி., நிலுவை தாக்கல் செய்து, முறையான தகவல் தெரிவிக்க வேண்டும்; தவறும்பட்சத்தில், நிரந்தரமாக கறுப்பு பட்டியலில் சேர்க்க உத்தரவு வழங்கப்படும்' என தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்