உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பாதாள சாக்கடை திட்ட பணி ரூ.300 கோடியில் துவக்கம்

பாதாள சாக்கடை திட்ட பணி ரூ.300 கோடியில் துவக்கம்

காஞ்சிபுரம், : காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில், 51 வார்டுகளில், 40 வார்டுகளில், பாதாள சாக்கடை வசதி உள்ளது. ஆனால், 10 ஆண்டுகளுக்கு முன்பாக புதிதாக இணைக்கப்பட்ட செவிலிமேடு, ஓரிக்கை, நத்தப்பேட்டை, தேனம்பாக்கம், திருக்காலிமேடு உள்ளிட்ட பகுதிகளில், பாதாள சாக்கடை வசதி இல்லாததால், அப்பகுதியினர் சிரமப்படுகின்றனர்.இதனால், பல ஆண்டு கால முயற்சிக்கு பின், உலக வங்கி நிதியுதவியுடன், 300 கோடி ரூபாய் செலவில், புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில், பாதாள சாக்கடை பணிகள் துவங்க உள்ளன.இதற்கான, அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி, செவிலிமேடு பகுதியில் நேற்று நடந்தது. இதில், தி.மு.க.,- - எம்.பி.,செல்வம், தி.மு.க.,- - எம்.எல்.ஏ.,க்கள் சுந்தர், எழிலரசன், மேயர் மகாலட்சுமி, கமிஷனர் செந்தில்முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பாதாள சாக்கடை திட்டம் குறித்து மேயர் மகாலட்சுமி கூறியதாவது:புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில், 2 ஆண்டுகளில் பாதாள சாக்கடை பணிகள் முடிக்க திட்டமிட்டுள்ளோம். மேன்ஹோல் கட்ட வேண்டிய அவசியமில்லை. தயாராக கட்டப்பட்ட தொட்டிகளை குழிக்குள் இறக்கி, பணிகள் வேகமாக முடிக்கப்படும்.அடுத்த 50 ஆண்டுகளுக்கு திட்டமிட்டு, இந்த பாதாள சாக்கடை பணிகள் துவங்கியுள்ளன. குறைவான எண்ணிக்கையில் வீடுகள் உள்ள பகுதிகளுக்கும் புதை வடிகால் பைப்லைன் அமைக்கப்படும். எதிர்காலத்தில் அப்பகுதியில் வீடுகள் கட்டப்பட்டால், எளிதாக பாதாள சாக்கடை வசதி பெற முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை