உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சாலை பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தல்

சாலை பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தல்

கோனேரிக்குப்பம்:காஞ்சிபுரம் ஒன்றியம், கோனேரிக்குப்பம் ஊராட்சி, மின் நகர் கட்டபொம்மன் தெருவில், 25க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இத்தெருவிற்கு பல ஆண்டுகளாக சாலை வசதி ஏற்படுத்தப்படாமல் உள்ளது.மண் சாலையாக உள்ளதால் மழைக்காலத்தில் இச்சாலையில் மழைநீர் தேங்கி சகதியாக மாறியது. இதனால், தற்காலிக தீர்வாக அப்பகுதியினர், சகதி சாலையில், கட்டடக்கழிவுகளை கொட்டியுள்ளனர். இதனால், வாகன போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. பாதசாரிகள் நடந்து செல்ல சிரமப்படுகின்றனர்.எனவே, சாலை பிரச்னைக்கு நிரந்தர தீர்வாக சிமென்ட் சாலை அமைக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கட்டபொம்மன் தெருவினர் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை