உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காதலர் தினம்: மெரினாவில் கெடுபிடி

காதலர் தினம்: மெரினாவில் கெடுபிடி

சென்னை : காதலர் தினம், நாளை பிப்.14ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னையில் மெரினா, எலியட்ஸ் கடற்கரை, மாமல்லபுரம் உள்ளிட்ட இடங்களில், காதலர்கள் அதிகம் கூடுவர். குறிப்பாக, மெரினா கடற்கரையில் காதலர்கள் வருகை அதிக அளவில் இருக்கும்.இந்நிலையில், மெரினாவில் அத்துமீறும் காதல் ஜோடிகளை கண்காணிக்க, போலீசார் ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.இதுமட்டுமின்றி, காதலர் தினம் ஒரு கலாசார சீர்கேடு எனக் கூறும் சிலர், காதல் ஜோடிகளை மிரட்டவும் செய்கின்றனர்.யாராவது இதுபோல் மிரட்டினால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, போலீசாருக்கு உயரதிகாரிகள் வாய்மொழி உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.மேலும், பள்ளி மாணவர்களில், 16 வயதுடைய காதல் ஜோடிகளை கண்காணித்து, அவர்களை எச்சரித்து வீட்டிற்கு அனுப்பவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக பாதுகாப்பு பணியில், பெண் போலீசாரை அதிகமாக ஈடுபடுத்தவும் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி