மேலும் செய்திகள்
21 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்
11 minutes ago
மானாம்பதியில் நுாலக கட்டடம் புதுப்பிப்பு
13 minutes ago
அங்கன்வாடி செல்லும் பாதை மண் கொட்டி சீரமைப்பு
14 minutes ago
ஸ்ரீபெரும்புதுார், ஸ்ரீபெரும்புதுாரில் காவலாளி கொலை வழக்கில், மது போதையில் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்த, கன்னியப்பன் என்பவரை போலீசார் கைது செய்து, ஸ்ரீபெரும்புதுார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலுார் சிறையில் அடைத்தனர். ஸ்ரீபெரும்புதுார் நகராட்சி அலுவலகம் அருகே, தேரடி பேருந்து நிறுத்தம் எதிரே உள்ள பிள்ளைமண்டபம் பகுதியில், 24ம் தேதி இரவு 11:00 மணிக்கு, தலையில் காயங்களுடன் கிடந்த ஆணின் சடலத்தை போலீசார் கைப்பற்றி விசாரித்தனர். அதில், இறந்தவர் சீர்காழி மாவட்டத்தைச் சேர்ந்த செல்லதுரை, 44, என்பதும், ஸ்ரீபெரும்புதுாரில் வாடகைக்கு தங்கி, சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையோரம், ஸ்ரீபெரும்புதுாரில் புதிகாக கட்டப்பட்டு வரும், டி-மார்ட் வணிக கடையில் காவலாளியாக வேலை செய்து வந்தது போலீசார் விசாரணையில் தெரிந்தது. தேரடி சாலை கடைகளில் உள்ள, 'சிசிடிவி' கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, சிவந்தாங்கல் பகுதியைச் சேர்ந்த கன்னியப்பன், 28, என்பவரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், இருவரும் 24ம் தேதி இரவு, அதே பகுதியில் உள்ள பாரில் அமர்ந்து மது அருந்திய போது, தகராறு ஏற்பட்டதாகவும். இதனால், ஆத்திரமடைந்த கன்னியப்பன், தேரடி பேருந்து நிறுத்தம் அருகே நடந்து சென்ற செல்லதுரையை மடக்கி, தாக்கி, அங்கிருந்த கல்லை எடுத்து தலையில் போட்டு கொலை செய்ததாக தெரிவித்துள்ளார். இதையடுத்து, கன்னியப்பனை, ஸ்ரீபெரும்புதுார் நீதிமன்றத்தில் அஜர்படுத்தி, வேலுார் சிறையில் அடைத்தனர். கன்னியப்பன் மீது, ஏற்கெனவே இரண்டு வழிப்பறி தொடர்பான வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
11 minutes ago
13 minutes ago
14 minutes ago