| ADDED : பிப் 23, 2024 11:44 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சியில், நான்கு மண்டலங்கள் கீழ், 51 வார்டுகள் உள்ளன. இதில், 1,000 தெருக்களில், 2 லட்சத்திற்கும் மேற்பட்ட நகரவாசிகள் வசிக்கின்றனர். சமீப நாட்களாக மாநகராட்சி முழுதும் கொசு உற்பத்தி அதிகமானதால், இரவு, பகல் என நாள் முழுதும் கொசுத்தொல்லை ஏற்படுவதாக நகரவாசிகள் புகார் தெரிவிக்கின்றனர். மஞ்சள் நீர் கால்வாய் முழுதும் கொசு உற்பத்தி பெருமளவில் நடக்கிறது. அதேபோல், வீடுகளை சுற்றியுள்ள குளம், குட்டை, கழிவுநீரில் இருந்தும் கொசு உற்பத்தியாகிறது. மாநகராட்சி சுகாதார பிரிவு சார்பில், அவ்வப்போது கொசு மருந்து அடிக்கின்றனர். ஆனால், கொசு தொல்லை குறையவே இல்லை என, நகரவாசிகள் புகார் தெரிவிக்கின்றனர்.இதனால், மலேரியா, டெங்கு போன்ற நோய்கள் ஏற்படுவதாகவும், கொசு உற்பத்தியை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.