உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மீன் குட்டையில் மூழ்கி இளைஞர் பலி

மீன் குட்டையில் மூழ்கி இளைஞர் பலி

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, கூத்திரம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர், ஆல்வார் மகன் சபரி, 19. பத்தாம் வகுப்பு வரை படித்த இவர், சற்று மன நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.இவர், தன் தாத்தா வேலு என்பவருடன், இயற்கை உபாதை கழிக்க, நேற்று, காலை 6:30 மணியளவில் சென்றபோது, கூத்திரம்பாக்கம் அருகேயுள்ள மீன் குட்டையில் இறங்கியுள்ளார்.அங்கு, 10 அடி ஆழம் கொண்ட தண்ணீரில், சபரி விழுந்து உயிருக்கு போராடியுள்ளார். இவரது தாத்தா வேலுவுக்கு நீச்சல் தெரியாததால், சபரியை காப்பாற்ற ஊருக்குள் சென்று ஆட்களை அழைத்து வருவதற்குள் சபரி தண்ணீரில் மூழ்கி இறந்து உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ