உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மின்சாரம் பாய்ந்து இளைஞர் பலி

மின்சாரம் பாய்ந்து இளைஞர் பலி

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, கூரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜானகிராமன் மகன் கார்த்திகேயன், 20. இவர், நேற்று, காலை 7:00 மணியளவில், தன் வீட்டில் புதிதாக கட்டிய சுவருக்கு தண்ணீர் அடிக்க, வீட்டில் உள்ள மின்மோட்டாரை இயக்கினார். அப்போது, மின்சாரம் பாய்ந்து, துாக்கியடிக்கப்பட்டார்.இதில், அங்கிருந்த கல்லில் தலை அடிபட்டு, சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார். தகவலறிந்த பாலுச்செட்டிச்சத்திரம் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று, இளைஞரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, தந்தை ஜானகிராமன் போலீசில் புகார் அளித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை