உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / இளைஞரின் உறுப்பு தானம் ஆறு பேருக்கு மறுவாழ்வு

இளைஞரின் உறுப்பு தானம் ஆறு பேருக்கு மறுவாழ்வு

சென்னை:செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தைச் சேர்ந்த சந்துரு, 32. இருசக்கர வாகனத்தில் சென்றபோது, சாலை விபத்தில் சிக்கியதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.ஆபத்தான நிலையில், ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் மூளைச்சாவு அடைந்தார்.அவரது உடல் உறுப்புகளை தானம் அளிக்க குடும்பத்தினர் முன்வந்ததால், இரண்டு சிறுநீரகங்கள், கல்லீரல், இதயம், விழி வெண்படலங்கள் என, ஆறு உறுப்புகள் தானமாக பெறப்பட்டன.அவற்றில் ஒரு சிறுநீரகம், ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கும், இதயம் எம்.ஜி.எம்., மருத்துவமனைக்கும், கல்லீரல் காவேரி மருத்துவமனைக்கும், விழி வெண்படலங்கள் எழும்பூர் அரசு கண் மருத்துவமனைக்கும் வழங்கப்பட்டன.பின், சந்துரு உடலுக்கு, டாக்டர்கள், நர்ஸ்கள், மருத்துவ பணியாளர்கள் அணிவகுத்து மரியாதை செலுத்தனர். மருத்துவமனை முதல்வர் தேரணிராஜன் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி