உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கன்னியாகுமரி / கள்ளக்கடல் எச்சரிக்கை எதிரொலி; குமரி கடற்கரையில் பாதுகாப்பு

கள்ளக்கடல் எச்சரிக்கை எதிரொலி; குமரி கடற்கரையில் பாதுகாப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நாகர்கோவில்: கள்ளக்கடல் எச்சரிக்கையையடுத்து கன்னியாகுமரி மாவட்ட சுற்றுலா கடற்கரை பகுதிகளில் நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.கடந்த மாதம் கள்ளக்கடல் எச்சரிக்கை விடுக்கப்பட்ட போது, அதையும் மீறி கடற்கரைக்கு சென்ற, ஐந்து பயிற்சி டாக்டர்கள் உட்பட, எட்டு பேர் கன்னியாகுமரி மாவட்ட கடலில் இறந்தனர்.இந்நிலையில், நேற்று முன்தினம் முதல் நேற்று நள்ளிரவு வரை கன்னியாகுமரி மாவட்ட கடற்கரை பகுதிகளுக்கு கள்ளக்கடல் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, சுற்றுலா அம்சங்களுடன் கூடிய அனைத்து கடற்கரையிலும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.ஐந்து பயிற்சி டாக்டர்கள் இறந்த, லெமூர் கடற்கரைக்கு செல்லும் வாசல்கள் மூடப்பட்டன. பேரூராட்சி நிர்வாகம் சார்பில் தமிழ், ஆங்கிலம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது.இதுபோல சங்குத்துறை, முட்டம், சொத்தவிளை, தேங்காபட்டணம், குளச்சல், மண்டைக்காடு கடற்கரை பகுதிகளிலும் பாதுகாப்பு போடப்பட்டு, அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது.கன்னியாகுமரியில் நேற்று காலை சூரிய உதயம் காண வந்த சுற்றுலா பயணியர், கடற்கரையில் இறங்காமல் இருக்க போலீசார் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தனர். நேற்று முழுதும் கடலில் பெரிய அலைகள் எழுந்ததால் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Azar Mufeen
ஜூன் 13, 2024 04:59

கோழை கடல் என்று பெயர் வைக்கலாம்


Hari Bojan
ஜூன் 12, 2024 12:47

என் சந்தேகத்தினை தீர்த்தமைக்கு நன்றி


Murthy
ஜூன் 12, 2024 12:37

இனி கருணாநிதி கடல் என்று அழைக்கலாமே??


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஜூன் 12, 2024 11:05

கள்ளக் காதல் எப்படி நீண்ட நாட்களுக்கு தெரியாமல் திடீரென ஒரு நாள் வெளியே தெரியும் போது குடும்பங்களில் கொந்தளிப்பு ஏற்படுமோ அது போல் கடலும் எப்பொழுதும் போல் அமைதியாக இருக்கும் ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் திடீரென அலைகள் வேகமாக உயர்ந்து எழுந்து அனைத்தும் வாரி சுருட்டி கொண்டு சென்று விட்டு பின்னர் மீண்டும் அமைதியாகி விடும். இது தான் கள்ளக் கடல். எப்பொழுது அலைகள் தீடிரென வேகமாக தாக்குதல் நடத்தும் என்பது தெரியாது என்பதால் இது கள்ளக் கடல் எனப்படுகின்றது.


Hari Bojan
ஜூன் 12, 2024 12:48

எனது சந்தேகத்தினை தீர்த்தமைக்கு நன்றி


தமிழ்வேள்
ஜூன் 12, 2024 10:50

கள்ளம் பலவகையிலும் திராவிடத்தின் ஏகபோக சொத்து ஆகையால் , இனி இந்த மாதிரி கடல் கொந்தளிப்பையும் கள்ளக்கடல் என்பதற்கு பதில் =திராவிட கடல் = என்று கூறுவோம் ....


ديفيد رافائيل
ஜூன் 12, 2024 09:57

"கள்ள கடல்" அப்படின்னா என்ன? புது வார்த்தையா இருக்கு. இத பற்றி தெளிவா சொல்லவே இல்லையே.


sethu
ஜூன் 12, 2024 09:17

சுவர் ஏறி குதித்து பின் வேஷ்டி இல்லாமல் தப்பி வந்து மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கு மனம் உண்டு என வியாக்கியானம் பேசிய கபோதிக்கு புகழ்பாடும் கூட்டம் இது .


Kumar Kumzi
ஜூன் 12, 2024 08:15

சொரியார் மண்ணில் கள்ளக்காதல் ஓகே இதென்ன கள்ளக்கடல் ஹீஹீஹீ


Samy Chinnathambi
ஜூன் 12, 2024 07:51

இது என்ன கள்ள கடல்? கடலில் இறங்க தடை.. தடையை மீறி கடலில் இறங்க தடை என்று அழகா பல வார்த்தைகள் இருக்க ..கள்ள கடல் என்று கடலை கொச்சை படுத்துவது போல உள்ளது


Kasimani Baskaran
ஜூன் 12, 2024 10:14

அப்படியே சுகுவனத்தையும் கூப்பிடுங்க...


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை