உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கன்னியாகுமரி / கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலைக்கு ரூ.2 கோடி செலவில் லேசர் மின்னொளி

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலைக்கு ரூ.2 கோடி செலவில் லேசர் மின்னொளி

நாகர்கோவில் : கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலையை கடற்கரையில் நின்றபடி கண்டு ரசிப்பதற்காக லேசர் மின்னொளி வசதி ரூ. இரண்டு கோடியில் அமைக்கப்படுகிறது.கன்னியாகுமரி கடல் நடுவில் விவேகானந்தர் பாறை அருகே உள்ள மற்றொரு பாறையில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டு உள்ளது. முதலில் விவேகானந்தர் பாறைக்கு படகில் அழைத்துச் செல்லப்படும் சுற்றுலா பயணிகள் பின்னர் அங்கிருந்து திருவள்ளுவர் சிலைக்கும் அழைத்துச் செல்லப்பட்டு வருகின்றனர்.ஆனால் இங்கு அலையின் தாக்கம் அதிகமாக இருக்கும் நேரங்களில் திருவள்ளுவர் சிலைக்கு படகுகள் செல்வதில்லை.இதை தவிர்க்க விவேகானந்தர் பாறையில் இருந்து நேரடியாக திருவள்ளுவர் சிலைக்கு செல்வதற்கு ரூ.37 கோடி செலவில் கண்ணாடி கூண்டு பாலம் அமைக்கும் பணி நடக்கிறது. திருவள்ளுவர் சிலை இரவில் சரியாக கரையிலிருந்துபடி பார்க்க முடியாத சூழ்நிலை காணப்படுகிறது. இதனால் இங்கு லேசர் மின்னொளி வசதி செய்ய ரூ.இரண்டு கோடியில் திட்டம் தயாரிக்கப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கியுள்ளன.பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகு துறை வளாகத்திலுள்ள ஒலி ஒளி காட்சிக்கூடத்தில் லேசர் மின் விளக்குகள் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்காக கடலுக்கு அடியில் பெரிய மின் கேபிள்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இப்பணிகள் இன்னும் ஓரிரு மாதங்களில் நிறைவு பெற்று திருவள்ளுவர் சிலை லேசர் ஒளியில் ஜொலிக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ