உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கன்னியாகுமரி / குமரிக்கு பிரதமர் மோடி நாளை வருகை விவேகானந்தர் பாறையில் 3 நாள் தியானம் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

குமரிக்கு பிரதமர் மோடி நாளை வருகை விவேகானந்தர் பாறையில் 3 நாள் தியானம் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

நாகர்கோவில்:3 நாட்கள் தியானம் இருப்பதற்காக பிரதமர் மோடி நாளை கன்னியாகுமரி வருவதையொட்டி போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக உயரதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.லோக்சபா தேர்தல் பிரசாரத்தை முடித்துக் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி நாளை (மே 30) மாலை 4:35 மணிக்கு கன்னியாகுமரி வருகிறார். அங்கிருந்து நேரடியாக விவேகானந்தர் பாறைக்கு செல்லும் அவர் அங்கு தியானத்தை தொடங்குகிறார். அன்று இரவும், மே 31 இரவும் அங்கு தங்கும் அவர் ஜூன் 1 மாலை அங்கிருந்து புறப்பட்டு கன்னியாகுமரி விருந்தினர் மாளிகைக்கு வருகிறார். பின்னர் ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் சென்று அங்கிருந்து டில்லி செல்கிறார்.பிரதமர் தங்குவதற்காக விவேகானந்தர் பாறையில் உள்ள கேந்திர நிர்வாக அதிகாரியின் அலுவலகம் புதுப்பிக்கப்பட்டு குளிர்சாதன வசதி பொருத்தப்படுகிறது. விவேகானந்தர் பாறையில் விவேகானந்தர் அமர்ந்து தியானம் செய்த இடத்தில் மூன்று நாட்கள் பிரதமர் தியானம் மேற்கொள்வதால் அவருக்கு தேவையான உணவுகள் அனைத்தும் விவேகானந்தர் பாறையில் அமைக்கப்படும் சிறப்பு அறையில் தயாரிக்கப்படுகிறது. பத்திரிகையாளர் உட்பட எவருக்கும் அனுமதி இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆலோசனை

இதனிடையே திருநெல்வேலி டி.ஐ.ஜி. பிரவேஷ் குமார் நேற்று கன்னியாகுமரியில் விவேகானந்தர் கேந்திர நிர்வாக அதிகாரி அனந்த ஸ்ரீ பத்மநாபன், எஸ்.பி. சுந்தரவதனம், டி.எஸ்.பி. மகேஷ் குமார், கடலோர பாதுகாப்பு குழும இன்ஸ்பெக்டர் நவீன், மாவட்ட வருவாய் அதிகாரி பாலசுப்பிரமணியம், ஆர்.டி.ஓ. காளீஸ்வரி மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.விவேகானந்தர் பாறையில் உள்ள விவேகானந்தர் மண்டபம் கேந்திர நிர்வாக அதிகாரி அலுவலகம் மற்றும் சுற்றுப்புறங்கள் அனைத்தும் போலீஸ் மோப்ப நாயுடன் சோதனை செய்யப்பட்டது. பிரதமர் பயணம் செய்ய வேண்டிய படகுகளும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. நேற்று முதலே விவேகானந்தர் பாறைக்கு செல்லும் பயணிகளின் உடைமைகள் பரிசோதிக்கப்பட்டு அனுப்பப்படுகின்றனர்.டில்லி பிரதமர் அலுவலகத்தில் இருந்து வந்த பாதுகாப்பு அதிகாரிகள் இங்கு செய்யப்பட்டு வரும் பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

ஆ.செந்தில்குமார், முழு நேர சங்கி
மே 29, 2024 16:50

மக்களின் வரிப்பயணத்தை அரசியல்வியாதிகள் எப்படியெல்லாம் வீணடிக்கிறார்கள் பாருங்கள்.


A1Suresh
மே 29, 2024 10:45

தியானம் என்பது தந்திரம் அல்லது ஆகம வழிபாட்டின் எட்டு அங்கங்களில் ஒன்றாகும் இதனை வராஹ தந்திரம் தெளிவாக விளக்குகிறது. தியானத்தின் கூறுகளாக படிநிலைகளாக யமம் நியமம் ஆசனம் பிராணாயாமம் பிரத்யாஹாரம் தாரணா தியானம் சமாதி என்று கூறுவர் இதெல்லாம் சனாதன தர்மத்தின் இன்றியமையாத வாழ்வியல் நெறியாகும்


A1Suresh
மே 29, 2024 10:41

பகவத் கீதையின் சுலோகத்தை மேற்கோள் காட்டுகிறேன். ப்ரக்ருதேர் க்ரியமாணானி குணை கர்மாணி சர்வஸ: அஹங்கார விமூடாத்மா கர்தா அஹம் இதி மன்யதே இதன் பொருள் எங்கும் செயல்கள் பகவானின் சக்தியான ப்ரக்ருதியின் மாறுபாட்டினால் விளைகின்றன. இதை அறிந்தவனே ஞானியாவான். ஆக இதுவரை பத்தாண்டுகளில் பலப்பல செயற்கரிய சாதனைகளை பெரிய தடைகள் கடந்து செய்தவர் நமது பிரதமர். அதற்கெல்லாம் தெய்வ அநுக்ரஹமே காரணம் என்று உணர்ந்து சொன்னார். அதை மூடர்கள் புரிந்து கொள்ளாமல் விமர்சிக்கின்றனர். வாழ்க பிரதமர் நல்ல சாந்தியும் கீர்த்தியும் திடமான ஆரோக்கியமும் சந்தோஷமும் சிரத்தையும் மேன்மேலும் பெற்று பிரதமர் நீடுழி வாழட்டும் என்று பகவானை பிரார்திக்கிறேன். நாட்டிற்கான அவருடைய தொண்டுகள் மேலும் சிறக்கட்டும்


மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி