வாசகர்கள் கருத்துகள் ( 1 )
கோடி ஸ்வாகா
மேலும் செய்திகள்
தாயை தாக்கிய தம்பியை கொலை செய்தவர் கைது
11-Dec-2025
கடத்தப்பட்ட குழந்தை 4 மணி நேரத்தில் மீட்பு
08-Dec-2025
நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, குழித்துறை தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில் இருந்து பம்மம் வரை, 2.5 கி.மீ.,க்கு மேம்பாலம் அமைக்கப்பட்டது. 222 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட இந்த பாலத்தை, 2018 நவம்பரில் பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த பாலத்துக்காக, 112 துாண்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், 22 துாண்கள் கான்கிரீட்டிலும், மற்றவை இரும்பிலும் செய்யப்பட்டுள்ளன.போதிய பராமரிப்பு பணி இல்லாததால், இந்த பாலம் நாளுக்கு நாள் உறுதியிழந்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர். திருநெல்வேலியில் இருந்து கேரளாவுக்கு கனிம வளங்களை, அதிக பாரத்துடன் ஏற்றி செல்லும் பெரிய லாரிகளால், இந்த பாலத்தின் தாங்கும் தன்மை பாதிக்கப்பட்டுஉள்ளதாக கூறப்படுகிறது.இந்நிலையில், பம்மத்திலிருந்து 100 மீட்டர் தொலைவில் இந்த பாலத்தின் ஒரு பகுதியில், இரண்டு மீட்டர் அளவுக்கு கான்கிரீட் கலவை உடைந்து, கம்பிகள் வெளியே தெரிந்தன.இதை அறிந்ததும், போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பாலம் உடனடியாக சீரமைக்கப்பட்டு, விரைவாக பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விடப்படும் என, தேசிய நெடுஞ்சாலை அதிகாரிகள் கூறினர்.
கோடி ஸ்வாகா
11-Dec-2025
08-Dec-2025