உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கன்னியாகுமரி / விவசாயி கொலை வழக்கில் 5 பேருக்கு ஆயுள் தண்டனை

விவசாயி கொலை வழக்கில் 5 பேருக்கு ஆயுள் தண்டனை

நாகர்கோவில்:கன்னியாகுமரி அருகே லீபுரத்தைச் சேர்ந்தவர் முத்துராஜ், 70, விவசாயி. இவரது அண்ணன் மகன் அருள் வீரதாஸ், 35. முத்துராஜ் வீட்டுக்கு மின் இணைப்பு வழங்க மின்வாரிய ஊழியர்கள் வந்த போது, அதே பகுதியைச் சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால் அவர்கள் திரும்பி சென்றனர். இதைத் தொடர்ந்து ஏற்பட்ட தகராறில், 2012ல் முத்துராஜ் அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். அருள் வீரதாஸ், கிறிஸ்டோபர் உட்பட ஐந்து பேர் படுகாயமடைந்தனர்.இது தொடர்பாக கன்னியாகுமரி போலீசார் லீபுரத்தைச் சேர்ந்த கோல்டன் தம்பி, 37, அருள் தேவதாஸ், 35, சுந்தர்ராஜ், 67, ஜெயராஜ், 43, ஜேக்கப் பால், 67, ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர்.வழக்கை விசாரித்த நாகர்கோவில் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி ஜோசப் ஜாய், கைதான ஐந்து பேரையும் குற்றவாளிகள் என அறிவித்து, ஐவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். இதில் சுந்தர்ராஜ் - -கோல்டன் தம்பி, ஜேக்கப்பால் -- அருள் தேவதாஸ் ஆகியோர் தந்தை - மகன் ஆவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ