மேலும் செய்திகள்
பத்திரம் வழங்க ரூ.35 ஆயிரம் லஞ்சம்
10-Oct-2024
நாகர்கோவில்:தடையில்லா சான்றிதழ் வழங்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கன்னியாகுமரி மாவட்ட வன பாதுகாவலர் அலுவலக காவலாளி பால்ராஜ் 56, கைது செய்யப்பட்டார்.கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டியைச் சேர்ந்த பால்ராஜ் வன பாதுகாவலர் அலுவலகத்தில் காவலாளியாக பணிபுரிகிறார். கன்னியாகுமரி அருகே வடக்கு தாமரைகுளத்தைச் சேர்ந்த மகாராஜா பிள்ளை தனக்கு சொந்தமான சொத்தில் பணிகள் செய்ய வனத்துறையினரிடம் தடையில்லா சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தார். இந்த சான்றிதழுக்கு ரூ.10 ஆயிரம் தந்தால் உடனடியாக பெற்று தருவதாகவும் அல்லாத பட்சத்தில் சான்றிதழ் கிடைப்பது சிரமம் என்றும் பால்ராஜ் கூறினார். இது குறித்து மகாராஜா பிள்ளை லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., ஹெக்டர் தர்மராஜிடம் புகார் அளித்தார். அவரது ஆலோசனையின் படி ரசாயனம் தடவப்பட்ட ரூ.10 ஆயிரத்தை வன பாதுகாவலர் அலுவலகத்தில் பால்ராஜிடம் கொடுத்த போது மறைந்திருந்த போலீசார் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.
10-Oct-2024