உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சேவல் சண்டை நடத்திய 3 பேர் கைது: 13 டூவீலர்கள் பறிமுதல்

சேவல் சண்டை நடத்திய 3 பேர் கைது: 13 டூவீலர்கள் பறிமுதல்

கரூர் : சின்னதாராபுரம் அருகே, சேவல் சண்டை நடத்தியதாக, மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். 13 டூவீலர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் எஸ்.ஐ., மகாமுனி உள்ளிட்ட போலீசார் நேற்று முன்தினம் மாலை, சி. கூடலுார் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சேவல் சண்டை நடத்தியதாக சிவன்மலை, 50; மோகன், 39; பாலசுப்பிர மணி, 38; ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய பிரதீப், 37; என்பவரை போலீசார் கைது செய்தனர்.மேலும், சேவல் சண்டை நடந்த இடத்தில் இருந்த, 13 டூவீலர்கள், 3,000 ரூபாயையும் சின்னதாராபுரம் போலீசார் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை