உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / டி.என்.பி.எல்., தொழிலாளர்குடும்பத்துடன் போராட்டம்

டி.என்.பி.எல்., தொழிலாளர்குடும்பத்துடன் போராட்டம்

வேலாயுதம்பாளையம்: ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியூறுத்தி டி.என்.பி.எல்., தொழிலாளர்கள் குடும்பத்துடன் நேற்று ஆலை முன் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.ஆர்ப்பாட்டத்தில் ஊதிய உயர்வு தொடர்பான கோரிக்கைகளை உடனடியாக அமல்படுத்துதல், அடிப்படை ஊதியத்துடன் அகவிலைப்படி உயர்த்துதல், ஓய்வு பெறும் வயதை 58 லிருந்து 60 ஆக உயர்த்த கோரியும் கோஷங்களை எழுப்பினர்.எல்.பி.எப்., தொழிற்சங்க தலைவர் ரத்தினகுமார், செயலாளர் பெரியசாமி, அண்ணா தொழிற்சங்க தலைவர் ராமசாமி, செயலாளர் பசுவலிங்கம், டி.என்.பி.எல்., பொது தொழிலாளர் சங்க தலைவர் ஜீவானந்தம் உள்பட அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை