குளித்தலை : குளித்தலை அடுத்த மருதுார் டவுன் பஞ்., மேட்-டுமருதுார் கிராமத்தில் உள்ள குடித்தெருவில், பகவதி அம்மன், ஒல்லி வெட்டி கருப்பு, சங்கிலி கருப்பு, மலையாள சுவாமி ஆகிய தெய்வங்கள் கொண்ட கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் திருவிழாவையொட்டி, நேற்று காலை, 10:00 மணியளவில், கிராம மக்கள் மருதுார் காவிரி ஆற்றில் இருந்து பால்குடம், தீர்த்தக்குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர். தொடர்ந்து, மேட்டு மருதுார் செல்லாண்டியம்மன், முருகன், மாரியம்மன், அங்காளம்மான், பகவதியம்மன் கோவில்களை சுற்றி வந்து, புனிதநீரை அம்ம-னுக்கு ஊற்றி சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. முன்னதாக, காலை செல்லாண்டியம்-மனுக்கு கிடா வெட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. இரவு, 8:00 மணிக்கு கரகம் பாலிக்க ஆற்றுக்கு புறப்படும் நிகழ்ச்சி நடந்தது. இன்று காலை, பொங்கல் வைத்து கிடா வெட்டுதல் நிகழ்ச்சியும், நாளை சந்தன காப்பு அலங்காரம், அபிஷேகம், செய்யப்பட்டு ஆற்றுக்கு எடுத்து செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து மஞ்சள் நீராட்டு-தலுடன் விழா முடிவடைகிறது.