உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அணை நீர்மட்டம் திருப்தி ஆற்றுப்பகுதிகளில் சுறுசுறு

அணை நீர்மட்டம் திருப்தி ஆற்றுப்பகுதிகளில் சுறுசுறு

கரூர்:அமராவதி அணை நீர்மட்டம், திருப்திகரமாக இருப்பதால், கரூர் மாவட்ட ஆற்றுப் பகுதிகளில் சோளம் பயிரிட நிலத்தை சமன்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது.திருப்பூர் மாவட்டம், உடுமலை பேட்டை அமராவதி அணையில் இருந்து, சம்பா சாகுபடிக்காக திறக்கப்பட்ட தண்ணீர் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.சம்பா அறுவடை நிறைவு பெற்ற நிலையில், சோளம் பயிரிட நிலத்தை டிராக்டர், மாட்டு வண்டிகள் மூலம் சமன்படுத்தும் பணிகள், கோடை மழையை நம்பி, கரூர் மாவட்டத்தில் அமராவதி ஆற்றுப்பகுதிகளான அரவக்குறிச்சி, க.பரமத்தி, தான்தோன்றிமலை, கிருஷ்ணராயபுரம் வட்டாரத்தில் தொடங்கியுள்ளது.ஒருவேளை, கோடை மழை தவறும் பட்சத்தில், அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளது. மேலும், 90 அடி கொண்ட அணையின் நீர் மட்டம், 46.62 அடியை தாண்டியுள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி