உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சாலை பராமரிப்பு துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

சாலை பராமரிப்பு துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

கரூர், தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சாலை பராமரிப்பு ஊழியர்கள் சங்கம், கரூர் மாவட்ட கிளை சார்பில், மாவட்ட தலைவர் ஞானசேகரன் தலைமையில், செல்லாண்டிபாளையம் கோட்ட பொறியாளர் அலுவலகம் முன், நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.அதில், நெடுஞ்சாலை துறை முதன்மை இயக்குனரின் உத்தரவை அமல்படுத்த வேண்டும். பயிற்சி பள்ளியில் சேர்ந்த தேதியை கொண்டு, வெளியிடப்பட்ட முதுநிலை பட்டியலை ரத்து செய்ய வேண்டும். முதன்மை இயக்குனரின் உத்தரவை ஏற்க முடியாது என தெரிவிக்கும் தாராபுரம் கோட்ட பொறியாளர் ராணி, பொள்ளாச்சி கோட்ட பொறியாளர் சரவண செல்வம் ஆகியோர் மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட துணைத்தலைவர் மகேந்திரன், செயலாளர் சிங்கராயர், இணை செயலாளர் கணேசன், நிர்வாகி தனலட்சுமி உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ