கரூர் : கரூர் அருகே, தி.மு.க.,வை சேர்ந்த டவுன் பஞ்., தலைவர் மற்றும் அவரது கணவரை தாக்கிய தாக, டவுன் பஞ்., அலுவலக உதவியாளர் உள்பட இரண்டு பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.கரூர் மாவட்டம், உப்பிடமங்கலம் மேற்கு பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார், 44; பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் டவுன் பஞ்.,சில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வருகிறார்.இவர், உப்பிடமங்கலம் வடக்கு கேட் பகுதியில், அரசுக்கு சொந்-தமான நிலத்தில் வீடு கட்டி வருவதாக புகார் எழுந்தது. இதனால், விளக்கம் கேட்டு உப்பிடமங்கலம் பஞ்., நிர்வாகம் சார்பில், சிவக்குமாருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்நி-லையில், தி.மு.க.,வை சேர்ந்த உப்பிடமங்கலம் டவுன் பஞ்., தலைவர் திவ்யா, 32; அவரது கணவரான, உப்பிடமங்கலம் பேரூர் தி.மு.க., செயலாளர் தங்கராஜ், 38, ஆகியோர் கடந்த, 20ல் உப்பிடமங்கலம்-சேங்கல் சாலையில் நின்று கொண்டிருந்-தனர். அப்போது, அங்கு சென்ற சிவக்குமார், அவரது நண்பர் பிர-பாகரன், 42; ஆகியோர், தங்கராஜூடன் தகராறு செய்துள்ளனர். அப்போது, இருதரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டு, தாக்கி கொண்டனர். அதில், நான்கு பேருக்கும் காயம் ஏற்பட்-டது.பிறகு, டவுன் பஞ்., தலைவர் திவ்யா கொடுத்த புகாரின்படி, சிவக்குமார், பிரபாகரன் ஆகியோர் மீது, வெள்ளியணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.