உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / க.பரமத்தி அருகே நடந்து சென்ற மாணவன் மீது கார் மோதி விபத்து

க.பரமத்தி அருகே நடந்து சென்ற மாணவன் மீது கார் மோதி விபத்து

அரவக்குறிச்சி,கரூர் மாவட்டம், பள்ளபாளையம் ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்த மகாராஜா மகன் மதன் கார்த்திக், 14. இவர் அருகில் உள்ள தனியார் பள்ளியில், ஏழாம் வகுப்பு படிக்கிறார்.நேற்று முன் தினம் இரவு, பெரிய தாதம்பாளையம் பகுதியில் உள்ள பஸ் ஸ்டாப் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிர் திசையில், கரூர் மாவட்டம், வாங்கபாளையம், வெள்ளக்கல் தெருவை சேர்ந்த சுப்பிரமணி, 60, என்பவர் வேகமாக ஓட்டி வந்த கார், மதன் கார்த்திக் மீது மோதி விபத்து ஏற்பட்டது.இதில் படுகாயமடைந்த மதன் கார்த்திக்கை மீட்டு, கோவையில் உள்ள அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இதுகுறித்து, க.பரமத்தி போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ