உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூர் அருகே குப்பை கிடங்கில் மீண்டும் தீ

கரூர் அருகே குப்பை கிடங்கில் மீண்டும் தீ

கரூர்: கரூர் அருகே, மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில், நேற்று மீண்டும் தீ விபத்து ஏற்பட்டது.கரூர் - வாங்கல் சாலை, அரசு காலனி பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு உள்ளது. அதில், மாநகராட்சியில் உள்ள, 48 வார்டுகளில் நாள்தோறும் சேகரிக்கப்படும் குப்பை கொட்டப்பட்டுள்ளது. அதில், சில மாதங்களுக்கு முன், தீ விபத்து ஏற்பட்டது. அப்போது, தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.இந்நிலையில், நேற்று மாலை குப்பை கிடங்கில், மீண்டும் தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்த, கரூர் தீயணைப்பு துறை வீரர்கள், மாநகராட்சி ஊழியர்கள் சென்று, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதனால், வாங்கல் சாலை முழுதும் புகை பரவியது. அப்போது, அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மூச்சுத்திணறலால் அவதிப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்