உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பயணிகள் நிழற்கூடத்தில் பஸ்களை நிறுத்த வேண்டுகோள்

பயணிகள் நிழற்கூடத்தில் பஸ்களை நிறுத்த வேண்டுகோள்

தான்தோன்றிமலை;கரூர்- திண்டுக்கல் சாலையில் உள்ள வெள்ளியணையில், பொதுமக்கள் வசதிக்காக பயணிகள் நிழற்கூடம் அமைக்கப்பட்டது. ஆனால், பஸ்களை பயணிகள் நிழற்கூடம் எதிரே நிறுத்தாமல், தள்ளி நிறுத்துகின்றனர்.இதனால், புதிதாக கட்டப்பட்டுள்ள பயணிகள் நிழற்கூடம் முன் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்தி வைத்துள்ளனர். இதனால், வெள்ளியணையில் பஸ்சுக்காக காத்திருக்கும் பொதுமக்கள், மழையிலும், வெயிலிலும் நிற்க வேண்டிய நிலை உள்ளது. நிழற்கூடம் முன் அரசு மற்றும் தனியார் பஸ்களை நிறுத்த வேண்டும். அதே நேரம் மற்ற வாகனங்களை அங்கு நிறுத்த தடை விதிக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை