உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / வீட்டு நுாலகங்களுக்கு விருது விண்ணப்பிக்க அழைப்பு

வீட்டு நுாலகங்களுக்கு விருது விண்ணப்பிக்க அழைப்பு

கரூர்: 'வீடுகளில் உள்ள நுாலகங்களுக்கு விருது பெற விண்ணப்பிக்கலாம்' என, கரூர் மாவட்ட நுாலக அலுவலர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.அவர், வெளியிட்ட அறிக்கை:ஒவ்வொரு மாவட்டத்திலும் இல்லம் தோறும் நுாலகம் அமைத்து சிறப்பாக பயன்படுத்தி வரும் தீவிர வாசகர்களை கண்டறிந்து விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கரூர் மாவட்டத்தில் வீட்டில் சிறப்பாக பராமரிக்கப்படும் ஒரு நுாலகத்தை தேர்ந்தெடுத்து விருது வழங்கப்படும்.வீடுகளில் நுாலகம் அமைத்து பராமரித்து வருவோர், தங்களது நுால் எண்ணிக்கை, எந்தெந்த வகையான நூல்கள் மற்றும் அரிய நூல்கள் எதாவது இருப்பின் அதன் விவரத்துடன் வரும் ஆகஸ்ட், 31-க்குள்,'நுாலகர், மாவட்ட மைய நுாலகம், கரூர்' என்ற முகவரி விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு தொலைபேசி எண் 04324 263550 தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி