| ADDED : ஆக 11, 2024 02:01 AM
அரவக்குறிச்சி;பள்ளிகளுக்கு இடையே, குறுவட்ட அளவிலான சதுரங்க விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், பள்ளப்பட்டி பள்ளி அணி மாவட்ட போட்டிக்கு தகுதி பெற்றது.அரவக்குறிச்சி மற்றும் பரமத்தி ஒன்றியங்களுக்கு உட்பட்ட, பள்ளிகளுக்கு இடையேயான குறுவட்ட அளவிலான சதுரங்க விளையாட்டு போட்டி, பள்ளப்பட்டி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்தது. 30க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த, 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ஜெயலட்சுமி தொடங்கி வைத்தார். 19 வயதுக்குட்பட்டோர் பிரிவில் பள்ளப்பட்டி மேல்நிலைப்பள்ளி மாணவி கௌசிகா முதலிடம் பெற்றார், இதே பள்ளியை சேர்ந்த ஐஸ்வர்யா மூன்றாமிடம் பெற்றார். ஆண்கள் பிரிவில் 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில் மாணவர் சத்யஜீவன் மூன்றாம் இடம் பெற்றார். இதனால் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர் மாவட்ட அளவிலான நடைபெறும் சதுரங்கப் போட்டியில் விளையாடுவதற்கு தகுதி பெற்றுள்ளனர்.வெற்றி பெற்றவர்களுக்கு பள்ளப்பட்டி எஜூகேஷன் சொசைட்டி முதன்மை உதவி செயலர் எஸ்.எஸ்.எம். அஷ்ரப் அலி பரிசு வழங்கினார்.