உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / வாலிபரிடம் நகை பறிப்பு கல்லுாரி மாணவர் கைது

வாலிபரிடம் நகை பறிப்பு கல்லுாரி மாணவர் கைது

கரூர்: கரூர் அருகே, டூவீலரின் சென்ற வாலிபரிடம் தங்க நகை பறித்து சென்ற, கல்லுாரி மாணவரை, போலீசார் கைது செய்தனர்.தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி பகுதியை சேர்ந்தவர் வசந்தகுமார், 29; ஈரோடு மாவட்டம், கொடுமுடியில் உள்ள அரிசி ஆலையில் வேலை செய்து வருகிறார்.இவர் கடந்த, 14ல் மதுரை-சேலம் சாலை சுக்காலியூர் பகுதியில், டூவீலரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, மற்றொரு டூவீ-லரில் சென்ற இரண்டு வாலிபர்கள், வசந்தகுமாரிடம் இருந்து, ஆறு கிராம் தங்கநகை மற்றும் மொபைல் போனை பறித்து சென்றனர்.இதுகுறித்து, வசந்தகுமார் கொடுத்த புகார்படி, தான்தோன்றி-மலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். அப்போது வசந்தகுமாரிடம் இருந்து, தங்க நகையை பறித்தவர்கள், கல்லுாரி மாணவர்கள் மகேந்திரன், 19, ராகுல் பிரசாத், 19, என தெரியவந்-தது.இதையடுத்து, மகேந்திரனை போலீசார் கைது செய்தனர், தப்பிய ராகுல் பிரசாத்தை தேடி வருகின்றனர். மகேந்திரன் பி.காம்., மூன்-றாவது ஆண்டும், ராகுல் பிரசாத் பி.ஏ., வரலாறு மூன்றாவது ஆண்டும் படித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ