உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / காவலர் குடியிருப்பில் தெரு விளக்குகள் சேதம்

காவலர் குடியிருப்பில் தெரு விளக்குகள் சேதம்

கரூர்;கரூர் அருகே, காவலர் குடியிருப்பில் உள்ள மின் விளக்குகள் சேதம் அடைந்துள்ளது. இதனால், விளக்குகள் எரியாததால், காவலர் குடும்பத்தினர் அவதிப்படுகின்றனர்.கரூர், ஈரோடு சாலை வடிவேல் நகரில், 150க்கும் மேற்பட்ட காவலர் குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளது. அதில், கரூர் டவுன் டி.எஸ்.பி., வீடு, அலுவலகம் மற்றும் இன்ஸ்பெக்டர் முதல், காவலர்களுக்கான அடுக்கு மாடி வீடுகள் உள்ளது.அதில் காவலர் குடும்பத்தினர், 500க்கும் மேற்பட்டவர்கள் குழந்தைகளுடன் வசித்து வருகின்றனர். இந்நிலையில், வடிவேல் நகர் காவலர் குடியிருப்புகளில் உள்ள, தெரு மின் கம்பங்களில் விளக்குகள் சேதம் அடைந்துள்ளது. விளக்குகள் எரியாததால், இரவு நேரத்தில் காவலர் குடும்பத்தினர் அவதிப்படுகின்றனர்.மேலும், காவலர் குடியிருப்பில் பாம்பு உள்ளிட்ட விஷ பூச்சிகள், இரவு நேரத்தில் உலா வருகிறது. எனவே, காவலர் குடியிருப்புகளில் உள்ள மின் கம்பங்களில், சேதம் அடைந்துள்ள விளக்குகளை மாற்ற, கரூர் மாவட்ட காவல் துறை நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி