உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சிறு பாலத்தில் வெளியே தெரியும் கம்பிகளால் காத்திருக்கும் ஆபத்து

சிறு பாலத்தில் வெளியே தெரியும் கம்பிகளால் காத்திருக்கும் ஆபத்து

கரூர்: கரூரில் சாலையின் குறுக்கே, சிறுபாலம் கட்டிய இடத்தில், வெளியே தெரியும் இரும்பு கம்பிகளால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் அச்சத்தில் செல்கின்றனர்.கரூர் ஜவஹர் பஜாரில் இருந்து, கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலுக்கு செல்லும் சாலையின் குறுக்கே, சில மாதங்களுக்கு முன்பு சிறுபாலம் கட்டப்பட்டுள்ளது. அப்போது, கான்கிரீட் அமைக்க போடப்பட்ட இரும்பு கம்பிகள், வெளியே தெரியும் நிலையில் உள்ளது. இணைப்பு சாலையில் போடப்பட்ட, தரமற்ற சிமென்ட் ஜல்லிக்கற்கள், சமீபத்தில் பெய்த மழையால் சிதறி கிடக்கின்றன. அந்த சாலை வழியாக, ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. அப்போது, நீட்டிய நிலையில் உள்ள, இரும்பு கம்பிகளால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.குறிப்பாக, இரவு நேரத்தில் சிறுபாலத்தில், தவறி விழுந்து நீட்டிய நிலையில் உள்ள, கம்பிகள் மூலம், பொதுமக்களுக்கு காயம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலுக்கு செல்லும் சாலையின் குறுக்கே உள்ள சிறுபாலத்தில், வெளியே தெரியும் இரும்பு கம்பிகளை அகற்றி, சிறுபாலத்தை சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ