உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

கரூர், கரூர், ஜவகர் பஜாரில் உள்ள தலைமை தபால் நிலையம் முன், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ராஜா தலைமை வகித்தார். இதில், புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தை செயல்படுத்த, தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணைப்படி, ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு கட்டணம் இல்லாமல் சிகிச்சை வழங்க வேண்டும். ஆனால், தமிழக அரசின் அரசாணையை அனுமதிக்காமல், சிகிச்சை பெறும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு சிகிச்சை கட்டணத்தில், 20 முதல், 40 சதவீதம் வரை மட்டுமே அனுமதித்து மிகப்பெரிய மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.இதன் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் ஊதியத்தில் தாமதமாகவே மாதந்தோறும் வருமான வரி பிடித்தம் செய்யும் முறையை கைவிட்டு, பழைய நடைமுறைப்படி வருமான வரி செலுத்த அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ