உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பள்ளப்பட்டியில் மருத்துவர் தின விழா

பள்ளப்பட்டியில் மருத்துவர் தின விழா

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி வட்டத்தில் உள்ள, அனைத்து மருத்துவர்களையும் ஒன்றிணைத்து பள்ளப்பட்டியில் மருத்துவர் தின திருவிழா கொண்டாடப்பட்டது.பள்ளப்பட்டியில் நடந்த விழாவிற்கு, பள்ளப்பட்டி நகர ஐக்கிய ஜமாத் தலைவர் தோட்டம் பஷீர் தலைமை வகித்தார். ஹபீபுல்லா, லயன் கணேசன், சூலபுரம் ரியாஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரிமா சங்க முன்னாள் தலைவர் ஷேக் பரீத் வரவேற்றார். அரவக்குறிச்சி வட்டத்தின் மூத்த மருத்துவருக்கான விருது பெற்ற, டாக்டர் கரீம் இந்நிகழ்வில் சிறப்பாளராக பங்கேற்றார். அரிமா சங்க தலைவர் பஷீர் நன்றி கூறினார். நிகழ்ச்சிகளை பாப்புலர் அபுதாஹிர் தொகுத்து வழங்கினார். முன்னாள் மருத்துவ இணை இயக்குனர் டாக்டர் அக்பர், டாக்டர் தமீம், அரசு மருத்துவர்கள் டாக்டர் வித்யாவதி, டாக்டர் பிரபாகரன், டாக்டர் செந்தில்நாதன் உள்ளிட்ட ஏராளமான மருத்துவர்கள் பள்ளப்பட்டி, அரவக்குறிச்சி, ஈசனத்தம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கலந்து கொண்டனர்.மருத்துவர்களுக்கு பொன்னாடை அணிவித்து, சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பொருளாளர் தர்வேஸ் அரபாத் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி