உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூர் ரயில்வே ஸ்டேஷனில் கூடுதல் டிக்கெட் கவுன்டர் திறக்க எதிர்பார்ப்பு

கரூர் ரயில்வே ஸ்டேஷனில் கூடுதல் டிக்கெட் கவுன்டர் திறக்க எதிர்பார்ப்பு

கரூர்,கரூர் ரயில்வே ஸ்டேஷனில் டிக்கெட் வழங்க, கூடுதல் கவுன்டர்களை திறக்க வேண்டும், என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.தென் மாவட்டங்களின் நுழைவு வாயிலாக உள்ள கரூர் வழியாக நாள்தோறும், 40க்கும் மேற்பட்ட பயணிகள் மற்றும் அதிவேக ரயில்கள் சென்று வருகின்றன. இதை தவிர கடந்த, 2013 முதல் கரூர் - சேலம் இடையே பயணிகள் ரயிலும் காலை, இரவு நேரங்களில் செல்கிறது. மேலும், கரூரில் இருந்து நாள்தோறும் ஈரோடு, நாமக்கல், திருச்சிக்கு ஆயிரக்கணக்கான பேர் வேலை மற்றும் கல்வி நிமித்தமாக சென்று வருகின்றனர். இதனால், கரூர் ரயில்வே ஸ்டேஷனில் பயணிகளின் கூட்டம் அதிகமாக உள்ளது. ஆனால், பயணிகளுக்கு ஒரு கவுன்டரில் மட்டுமே டிக்கெட் வழங்கப்படுகிறது. இதனால், சில பயணிகள் டிக்கெட் வாங்கிய பிறகும், ரயிலை தவற விடுகின்றனர். ஆனால், தொடர்ந்து ஒரே கவுன்டரில் டிக்கெட் வழங்கப்படுவதால், பயணிகள் டிக்கெட்டை பெற நீண்ட வரிசையில் நின்று அவதிப்படுகின்றனர்.எனவே, கரூர் ரயில்வே ஸ்டேஷனில் பயணிகளுக்கு டிக்கெட் வழங்க கூடுதல் கவுன்டர்கள் திறக்க, சேலம் கோட்ட ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்