உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / செம்மறி ஆடு வளர்ப்பு குறித்து இலவச பயிற்சி

செம்மறி ஆடு வளர்ப்பு குறித்து இலவச பயிற்சி

கரூர்: கரூர் மாவட்டம், மண்மங்கலத்தில் உள்ள பண்டுதகாரன்புதுார் கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில், வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடு வளர்ப்பு குறித்த இலவச பயிற்சி நடந்தது. மைய தலைவர் அமுதா தலைமை வகித்தார்.தமிழகத்தில் உள்ள வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகளின் இனங்கள், அவற்றின் இயல்புகள், வளர்ப்புக்கு ஏற்ற ஆடு-களை தேர்வு செய்வது, கொட்டகை அமைக்கும் முறை, ஆடுகள், குட்டிகள் மற்றும் கிடாய் ஆகியவற்றை பராமரிக்கும் முறை, ஆடுகளை தாக்கும் நோய்கள், அவற்றை தடுக்கும் முறைகள், ஆடுகளுக்கான தீவன புற்கள், வளர்ந்த குட்டிகளை சந்தைப்படுத்துதல் ஆகியவை குறித்து ஒலி, ஒளி காட்சிகளுடன் விளக்கம் அளித்தனர். நிகழ்ச்சியில், பேராசிரியர் வசந்தகுமார் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி