உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கருணாநிதி நுாற்றாண்டு விழா கவிஞர்களுக்கு விருது வழங்கல்

கருணாநிதி நுாற்றாண்டு விழா கவிஞர்களுக்கு விருது வழங்கல்

குளித்தலை: குளித்தலை, காவிரி நகர் கிராமியம் அரங்கத்தில், நேற்று காலை, 11:00 மணியளவில் தமிழ்ச்சங்கம் சார்பில், முன்னாள் முதல்வர் கருணாநிதி நுாற்றாண்டு நிறைவு விழாவையொட்டி, தமிழகம், கேரளா மாநிலத்தில், 100 கவிஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு, 'கலைஞர் கவி ஞாயிறு' விருது வழங்கும் விழா நடந்தது. தமிழ்ச்சங்க தலைவர் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். செயலாளர் மாணிக்கவாசகம் வரவேற்றார். உழவர் மன்ற அமைப்பாளர் கோபாலதேசிகன், மத்திய சுற்றுச்சூழல் குழு உறுப்பினர் கிராமியம் நாராயணன், தமிழ்ச்சங்க துணைத்தலைவர் ரவிக்குமார், குளித்தலை முகன், மாவட்ட தி.மு.க., அயலக அணி அருண்மொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர். எம்.எல்.ஏ., மாணிக்கம், 100 கவிஞர்களுக்கு, 'கலைஞர் கவி ஞாயிறு' விருது வழங்கி பாராட்டி பேசினார். நகராட்சி தலைவர் சகுந்தலா, கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் ரம்யா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்