உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / குளித்தலை அரசு பள்ளியில் மேலாண்மைக்குழு கூட்டம்

குளித்தலை அரசு பள்ளியில் மேலாண்மைக்குழு கூட்டம்

குளித்தலை, குளித்தலை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், நேற்று காலை, 10:00 மணியளவில், பள்ளி மேலாண்மைக்குழு, பெற்றோர் விழிப்புணர்வு கூட்டம், பள்ளி தலைமை ஆசிரியர் அனிதா தலைமையில் நடந்தது. மேலாண்மைக்குழு தலைவி ரேவதி, உதவி தலைமை ஆசிரியர்கள் பத்மாவதி, கலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில், கூட்டத்தின் நோக்கம், தமிழக முதல்வர், கல்வித்துறை அமைச்சர் ஆகியோரின், வாழ்த்து செய்தி திரையில் காண்பிக்கப்பட்டது. மேலும், பள்ளி மேலாண்மைகுழு மற்றும் அதன் பணிகள் பகிர்வு, அரசாணை வழிகாட்டு நெறிமுறை, மறு கட்டமைப்பு மற்றும் உறுப்பினர்கள் தேர்வு செய்யும் முறை குறித்து ஆசிரியை சங்கீதா மற்றும் முன்னாள் ஆசிரியர் டேவிட்மனோகர் விளக்கி பேசினர். தொடர்ந்து, பணிநிறைவு பெற்ற தலைவர், உறுப்பினர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. வரும், 24ல் புதிய பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தேர்வு நடப்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை