உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சாலையோரம் குவியல் குவியலாக கற்கள் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

சாலையோரம் குவியல் குவியலாக கற்கள் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

கரூர், கரூர் - திருச்சி நெடுஞ்சாலையில் சுக்காலியூர் வழியாக தினமும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையோரம், சென்டர் மீடியன் ஆகிய பகுதியில் குவியல் குவியலாக கற்கள் கிடக்கின்றன. நெடுஞ்சாலையில் வரும் வாகனங்களுக்கு வழி விடுவதற்காக சாலையோரம் ஒதுங்க முடியாமல் வாகன ஓட்டிகள் தவிக்கின்றனர். சில நேரங்களில் இந்த கற்கள் மீது, வாகனங்கள் ஏறி, நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்துகள் ஏற்படுகின்றன. இதுகுறித்து நெடுஞ்சாலை துறையினர் கண்டு கொள்வதே இல்லை. பாதசாரிகள், இருசக்கர வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, சாலையோரம் உள்ள கற்களையும், மண் குவியலையும் அப்புறப்படுத்தி வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை