கரூர்: கரூர் மாவட்ட, பா.ஜ., சார்பில், சுதந்திர தின விழாவையொட்டி, தேசிய கொடியுடன் டூவீலர் பேரணி நேற்று நடந்தது.கரூர் பா.ஜ., அலுவலகத்தில், மாவட்ட இளைஞர் அணி தலைவர் தீனசேனன் தலைமையில் தொடங்கிய பேரணி, கோவை சாலை, ஜவஹர் பஜார் வழியாக, சுதந்திர போராட்ட வீரர் சுபாஷ் சந்திர போஸ் சிலையை அடைந்தது. பிறகு, அவரது சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தப்பட்டது. பேரணியில் பங்-கேற்ற பா.ஜ., நிர்வாகிகள் தேசிய கொடியுடன், டூவீலரில் சென்றனர். மாவட்ட பா.ஜ., துணைத்தலைவர்கள் ஆறுமுகம், செல்வம், மாவட்ட செயலாளர் செல்வராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.* கரூர் மாவட்ட காவல் துறை சார்பில், சுதந்திர தின விழாவையொட்டி, டூவீலர் பேரணி நேற்று நடந்தது. கரூர் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து தொடங்கிய பேரணியை, டி.ஆர்.ஓ., கண்ணன் கொடியைசைத்து தொடங்கி வைத்தார். டூவீலர் பேரணியில் பங்கேற்ற போலீசார், ெஹல்மெட் அணிந்து கொண்டு, தேசிய கொடியுடன் வடிவேல் நகர், காவலர் குடியிருப்பு வரை சென்றனர். பேரணியில், கரூர் டவுன் டி.எஸ்.பி., செல்வராஜ், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மணிவண்ணன், முத்துக்குமார், சுமதி, ஷகிரா பானு உள்பட, 50க்கும் மேற்பட்ட போலீசார் பங்கேற்றனர்.