உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / டூவீலர்கள் நேருக்கு நேர் மோதி முதியவர் படுகாயம்

டூவீலர்கள் நேருக்கு நேர் மோதி முதியவர் படுகாயம்

  1. அரவக்குறிச்சி, விஸ்வநாதபுரி அருகே, டூவீலர்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் முதியவர் படுகாயம் அடைந்தார்.கரூர் மாவட்டம், திருமாநிலையூர் அருகே முதல் கிழக்கு தெருவை சேர்ந்தவர் கோபால், 67. இவர் நேற்று கரூர் மாவட்டம், விஸ்வநாதபுரி வாய்க்கால் ரோட்டில் டூவீலரில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர் திசையில் விஸ்வநாதபுரியை சேர்ந்த கார்த்திக், 31, என்பவர் ஓட்டி வந்த டூவீலர் கோபால் ஒட்டி சென்ற டூவீலர் மீது நேருக்கு நேர் மோதியது.இந்த விபத்தில் கோபால் பலத்த காயம் அடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.க.பரமத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை