உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / டூவீலர் மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

டூவீலர் மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

அரவக்குறிச்சி:வெள்ளியணை அருகே பிச்சம்பட்டியை சேர்ந்தவர் ஜெயராஜ் மகன் ராஜா, 42. இவரது மனைவி பிரீத்தி, 40. இவர்களது மகள் மிஸ்பா ஏஞ்சல், 4. மூன்று பேரும், டூவீலரில் வெள்ளியணையிலிருந்து புறப்பட்டு, பள்ளப்பட்டி உறவினர் வீட்டிற்கு சென்றனர். மீண்டும் டூவீலரில் நேற்று முன்தினம், சின்னதாராபுரம் பகுதியில் இருந்து தென்னிலை செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தனர்.காமாட்சிபுரம் காலனி அருகே வந்தபோது, எதிரே வந்த கார் பைக் மீது மோதியது. இதில் பைக்கில் வந்த மூவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. மூன்று பேரையும் ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு, கரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தொடர் சிகிச்சை பெற்று வந்த ராஜா, சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.காரை ஓட்டி வந்த கண்ணன் என்பவர் மீது, சின்னதாராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை