உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மாநில இருவழி சாலையாக மாற்றி அமைக்க முதல்வருக்கு மனு

மாநில இருவழி சாலையாக மாற்றி அமைக்க முதல்வருக்கு மனு

குளித்தலை:காவிரி படுகை விவசாயிகள் கூட்டமைப்பு தலைவர் வளையப்பட்டி ஜெயராமன், தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:குளித்தலை சட்டசபை தொகுதியில், மருதுார் டவுன் பஞ்., முதல் நெய்தலுார் வரை உள்ள சாலைகளை, மாநில இரண்டு வழிச்சாலையாக மாற்றி அமைக்க வேண்டும். இதனால் டவுன் பஞ்., கிராம பஞ்.,களில் பொருளாதாரம் உயரவும், தொழில் நிறுவனங்கள் அமையவும், அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லுாரி, விவசாயம் செழிக்கவும் ஏதுவாக இருக்கும்.மேலும், மாநில இரண்டு வழிச்சாலை அமைந்தால் தேசிய நெடுஞ்சாலை மற்றும் கிராம சாலைகளில் ஏற்படும் போக்குவரத்து இடையூறு, விபத்துகள் தவிர்க்கப்படும். இதனால் நகர பகுதிக்கு இணையாக கிராம பகுதி திகழும். ஆகவே, மருதுார் முதல் நெய்தலுார் வரையுள்ள கிராம சாலையை, மாநில இரண்டு வழிச்சாலையாக மாற்றி அமைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை