உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பிரதமரின் வேலைவாய்ப்பு திட்டம் :ரூ.16.08 கோடி மானியம் வழங்கல்

பிரதமரின் வேலைவாய்ப்பு திட்டம் :ரூ.16.08 கோடி மானியம் வழங்கல்

கரூர்:பிரதமரின் வேலைவாய்ப்பு திட்டத்தில், 16.08 கோடி ரூபாய் அரசு மானியம் வழங்கப்பட்டுள்ளது என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்தார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:கரூர் மாவட்ட தொழில் மையத்தின் மூலம் பல திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நீட்ஸ் திட்டத்தில், 33 இளைஞர்களுக்கு, 24.51 கோடி ரூபாய் கடன் உதவி, 6.12 கோடி ரூபாய் அரசு மானியமாக வழங்கப்பட்டுள்ளது. படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டத்தின் கீழ், 122 பேருக்கு, 5.69 கோடி ரூபாய் கடன் உதவி, 1.42 கோடி மானியமாக வழங்கப்பட்டுள்ளது. பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ், 773 பேருக்கு, 39.84 கோடி மதிப்பிலான கடன் உதவி, 16.08 கோடி ரூபாய் அரசு மானியமாக வழங்கப்பட்டுள்ளது.சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சி திட்டத்தில், 39 நிறுவனங்களுக்கு மூலதன மானியமாக, 7.91 கோடி ரூபாய், மின் மானியமாக, 57 நிறுவனங்களுக்கு, 45 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த, 3 ஆண்டுகளில் மாவட்ட தொழில்மையத்தின் மூலம், 594 தொழில் முனைவோர்களுக்கு, 89 கோடி ரூபாய் கடன் உதவி, 23.18 கோடி அரசு மானியமாக வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ