குளித்தலை: குளித்தலை அடுத்த வடசேரி பஞ்., காவல்காரன்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்தவர் சபாபதி, 49. தோகைமலை - திருச்சி நெடுஞ்சாலை செங்குளம் அருகே சைக்கிள் கடை வைத்து தொழில் செய்து வருகிறார். இவரது கடைக்கு அருகே, திருச்சி மாவட்டம், இனாம் புலியூர் சந்தை ரைஸ் மில் பகுதியை சேர்ந்த சக்திவேல், 45, தள்ளுவண்டியில் மீன் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த கடையில் இருந்து, மீன் கழிவுகளை வெளியேற்றி, சைக்கிள் கடை அருகே கொட்டுவது தொடர்பாக இருவருக்கும் முன்விரோதம் உள்ளது. இந்நிலையில், கடந்த ஜூலை, 30 இரவு, 8:00 மணியளவில் சைக்கிள் கடையை பூட்டிவிட்டு சபாபதி சென்றார். அப்போது, சக்திவேல், 40, இவரது மனைவி அம்மாளு, 36, மற்றும் 15 வயது சிறுவன், அடையாளம் தெரியாத நபர் ஆகியோர், சபாப-தியை வழிமறித்து கம்பியால் அடித்துள்ளனர். இதுகுறித்து, சபா-பதி கொடுத்த புகார்படி, சக்திவேல், இவரது மனைவி அம்மாளு ஆகிய இருவரையும் தோகைமலை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள, 15 வயது சிறுவன் மற்றும் அடையாளம் தெரியாத நபர் ஆகிய இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.