உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சிறப்பு கிராமசபை கூட்டம்

சிறப்பு கிராமசபை கூட்டம்

குளித்தலை;குளித்தலை அடுத்த வடசேரி பஞ்., அலுவலக வளாகத்தில், சிறப்பு கிராமசபை கூட்டம் பஞ்., தலைவர் சரவணன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் பஞ்., செயலாளர் நாகராஜன் தீர்மானங்களை வாசித்தார்.இதில், வடசேரி ஊராட்சி கிராமங்களில், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தில் மாதிரி சமூக தணிக்கை, 2016 - -2017 முதல் ஜூலை, 2022 வரை உள்ள நிதியாண்டிற்கான செயல்பாடுகளை, தமிழ்நாடு சமூக தணிக்கை சங்க இயக்குனர் அவர்கள் தெரிவித்தது போல், ஆக., 5 முதல் 9 வரை மாதிரி சமூக தணிக்கை மேற்கொள்ளப்பட்டு, அதற்கான சமூக தணிக்கை அறிக்கை, சிறப்பு கிராம சபை கூட்டத்தின் முன் ஒப்புதல் பெற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பஞ்., துணைத்தலைவர் பாலாமணி தங்கராசு உள்பட பலர் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ